Header Ads Widget

<

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 இனிமேல் ரூ.1500 ஆக உயர்வு குட் நியூஸ்



தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகப்பெரிய திட்டமாகும். தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான குடும்ப தலைவிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த தொகை உயர்த்தப்படும் எனவும், 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயனாளர்கள்  உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14  லட்சமாக குறைந்து இருக்கிறது. அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பயனாளிகளின் வங்கி கணக்குகள், நிலப்பதிவுகள், வருமான வரி கணக்குகள், வாகனப்பதிவு ஆகியவை டிஜிட்டல் முறையில் சமூக பாதுகாப்பு ஆணையரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் இந்த நீக்கம் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இவை மாதம் மாதம் தொடரும் என்று தெரிவித்துள்ளது.


உயரப்போகும் உரிமைத் தொகை: 

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மாதம் தோறும் மின் கட்டணம், கல்வி கடன் ரத்து, மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
பட்ஜெட் எதிர்பார்ப்பு: இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டத்தை அறிவித்த தமிழக அரசு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது. எனவே 2026 சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு மகளிர் உரிமைத் தொகை 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ஏற்கனவே ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், மேல் முறையீடு செய்தவர்கள் மட்டுமல்லாமல்  அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குடும்ப தலைவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.