Header Ads Widget

<

பொங்கல் பரிசு தொகை ரூ.1000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு


தமிழகத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில்  1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.ஆனால் இந்த ஆண்டு ரொக்கப்பணம் அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கமும் வழங்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு பணம் வழங்கப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த முடிவு எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உறுப்பினர்களாக இருக்கும் நபர்களிடமும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் சேர்க்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதற்கு ஏதுவாக மற்ற திட்டங்களில் இருந்து நிதியை மறு ஒதுக்கீடு செய்யும் ஆப்ஷன்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது. நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மாதம் மாதம் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக்கூட்டியே வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் தொகுப்பினை பெற ரேஷன் அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளில் ஜனவரி 13ஆம் தேதி வரை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.