Header Ads Widget

<

100 நாள் வேலை திட்ட சம்பளம் இன்று வெளியான முக்கிய தகவல்கள்


இந்திய முழுவதிலும் கிராமப்புற மக்களின் வறுமை ஒழிப்புக்காக மத்திய அரசால் கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலை திட்டம் (MGNREGA) ஆகும் (MAHATMA GANDHI NATIONAL RURAL EMPLOYMENT GUARANTEE SCHEME IN TAMIL) ஊரக உறுதி திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்திரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளிகள் அடிக்கடி தங்களது வங்கி கணக்கை மாற்றுவதாலும், மற்றும் புதிய வங்கி கணக்கு எண்ணை சரியான நேரத்தில் வழங்காததாலும் ஊதியம் செலுத்தும் பல பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊதியம் பெற அனைவரும் ஆதார் எண்ணை கொண்டு பணம்  செலுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



AEPS என்பது வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் ஒரு செயல்முறையாகும். இதன் மூலம் இந்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் அனைத்து மானிய பலன்களையும் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் பெறமுடியும். இதற்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் சுயவிருப்பதுடன் அனைத்து நேரடி மானிய பலன்களை இந்த ஒரு பெற விரும்புகிறேன் என்று சம்மதம் அளிக்க வேண்டும். அப்போதுதான் சம்பளம் எந்த தடை இல்லாமல் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கான ஊதியம் வார இறுதியிலோ அல்லது அதிகபட்சம் 15 நாட்களுக்கு உள்ளாகவோ வழங்கப்படவேண்டும். ஆனால் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கதாகத்தால் கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஆயிரத்து ஐம்பத்தி ஆறுகோடி நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களும் நிலுவை தொகையை வழங்கவேண்டுமென வலியுறுத்திவருகின்றனர்.