Header Ads Widget

<

குடும்ப தலைவிக்கு பொங்கல் பரிசு ரூ.2000 வெளியான முக்கிய தகவல்


தமிழகத்தில் வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ்  குடும்ப   அட்டைதரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக  அரிசி இலவசமாகவும் துவரம் பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பண்டிகைக்கு தேவையான இலவச அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அட்டை அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்  மகளிர் உரிமைத் தொகை திட்டம் போல் ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகையை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியான தகவலின் படி, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக ஒரு கிலோ வெல்லம் வழங்கவும், பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவும், பொங்கல் பரிசுத் தொகுப்பின் போது வழங்கப்படும் கரும்பு, தேங்காய் போன்ற பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் “ஆயிரம் ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தும் போது, குறைந்தபட்ச தொகை இருப்பில் இல்லை என்பதற்காக வங்கியில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யக்கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை வங்கி மூலம் வழங்கப்படும் போது, பொங்கல் பரிசுத் தொகையையும் சேர்த்து வங்கி கணக்கில் செலுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் எனக்  கூறப்படுகிறது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை ஆகிய இரண்டும் கிடைக்க உள்ளதால். குடும்ப பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் அட்டைக்கு ரூ.2000

இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் அமுதா கூறுகையில், ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று முதல்வர் அறிவித்த ரூ 2000 நிவாரணம் நியாவிலைக்கடை மூலம் வழங்கப்படும். மற்ற இடங்களில் இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு படிப்படியாக இரண்டு மூன்று தினங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக இந்த நிவாரணத் தொகையானது வழங்கப்படும் எனத்  தெரிவித்துள்ளார்.