Header Ads Widget

<

நகை கடன் உள்ளவர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு


நகை கடன் வாங்கியவர்கள் முழு தொகையும் செலுத்த முடியாமல் வட்டியை மட்டும் செலுத்தி வந்து, அசலை கட்ட முடியாமல் நகையை மீட்க முடியாத நிலை இருந்து வந்த நிலையில், அவர்கள் பயன்பெறும் வகையில், புதிய சலுகையை இந்திய ரிசர்வ் வங்கிகொண்டுவரவுள்ளது. இந்த புதிய சலுகையில் படி, வீடு, வாகனக் கடன் போலவே, இ.எம்.ஐ., எனப்படும் மாதத் தவணை முறை, விரைவில் நகைக் கடனுக்கும் கொண்டு வரப்படவுள்ளது.நகைக் கடனில், வட்டி மற்றும் அசலை கணக்கிட்டு, இ.எம்.ஐ.,யில் அதாவது, மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வங்கிகள், தங்க நகைக் கடன் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெற உள்ளனர்.தங்க நகைகள் மீதான கடன் வணிகத்தில் உள்ள குறைபாடுகள், நடைபெறும் மோசடிகள் குறித்து, ரிசர்வ் வங்கி அண்மையில் கவலை தெரிவித்தது.

குடும்ப தலைவிக்கு இனிமேல் மாதம் ரூ.2000 சூப்பர் செய்தி

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், தங்க நகைக் கடன் தொகை, நகை மதிப்பீடு, நகை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை, நகைக்கு இணையான கடன்தொகை விகிதம், ஒரே அடமானக் கடன் மீது கூடுதல் கடன் ஆகியவற்றில், பல குறைபாடுகள் தெரிய வந்திருப்பதாக அதில் கூறப்பட்டது. இந்த புதிய முறையின் கீழ், நகை கடன் பெற்றவர்கள்  அசல் மற்றும் வட்டி இரண்டையும் சமமான மாதாந்திர தவணைகளில் (EMI) கடன் காலத்தின் தொடக்கத்திலிருந்து செலுத்த வேண்டியிருக்கும். தங்கக் கடன்களை டெர்ம் லோன்களாக வழங்குவது குறித்து வங்கிகள் மற்றும் நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் ஆலோசித்து வந்தன.

இதனை தொடர்ந்து நகைக் கடன் வணிகத்தில் புதிய வசதியாக, இ.எம்.ஐ., திட்டத்தை அறிமுகம் செய்ய வங்கிகள், நகைக் கடன் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி, பெறப்படும் நகைக் கடனுக்கு வட்டியை மட்டும் கட்டாமல், குறிப்பிட்ட காலத்தை தேர்வு செய்து, வீடு, வாகனக் கடன் போல, அசலில், குறிப்பிட்ட தொகையையும் சேர்த்து, மாதத் தவணையில் கட்டலாம்.இதனால், குறிப்பிட்ட ஆண்டுகளில், நகைக் கடன் அடைவதுடன், அசலைக் கட்ட முடியாமல், நகைகள் ஏலம் விடப்படுவது தவிர்க்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கும் நன்மை ஏற்படும். இதன் மூலம் நகை கடன் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.