Header Ads Widget

<

கலைஞர் உரிமைத் தொகை குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஜனவரி முதல் புதிய மாற்றம்



தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் மாதம் தகுதி வாய்ந்த பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்  கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர்.தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ள போதிலும் பலர் இன்னும் திட்டத்தில் இணையாமல் உள்ளனர். 2 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் திட்டத்தில் இணையமுடியாமல் உள்ளனர். எனவே மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை மீண்டும் நடத்த வேண்டும், பொருளாதார தகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த திட்டத்தில் பயனாளர்களை அதிகரிப்பதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில் அதற்கு முன்பாக கலைஞர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதாவது ஜனவரி மாதத்திற்குள் தகுதி வாய்ந்த அத்தனை பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத வகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் கூறியுள்ளார். ஜனவரி முதல் அல்லது பொங்கல் முதல் மகளிர் உரிமைத்தொகையில் இன்னும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய குடும்ப  பெற்றவர்கள் பலரும் பயனடையும் வகையில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் முக்கியமான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இத்திட்டம் 1 கொடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத மகளிர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுகுறித்து தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், தங்களுடைய கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விடப்பட்ட தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 1 கோடி பேரை பயனாளர்களாக இணைக்கலாம் என்று ஆரம்பத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், அரசு அறிவித்த பொருளாதார தகுதி பட்டியலுக்குள் வரும் அத்தனை பேரையும் இணைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் ஆய்வு செய்யப்படும் 

மகளிர் உரிமைத்தொகை குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெரும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகளை மாதம்தோறும் ஆய்வு செய்யப்படும்.  வருமானம் உயர்வு, 4 சக்கர, கனரக வாகனபதிவு, பத்திரப்பதிவு குறித்தும், அரையாண்டு அடிப்படையில் தொழில், மின்சார பயன்பாடுகள் பற்றிய தரவுகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - தமிழக அரசு விளக்கம்
 
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 குறித்த குறுந்தகவல் வந்தும்  வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பணம் கிரெடிட் ஆகாதவர்கள் தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் பணம் வரவு வைக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் 

ஜனவரி முதல் அல்லது பொங்கல் முதல் மகளிர் உரிமைத் தொகையில் இன்னும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அது எப்படி இருக்கும் என்றால், எதாவது சில காரணங்களால், உதவித்தொகை கிடைக்காமல் போன பெண்கள்  அனைவருக்கும்  மகளிர் உரிமைத் தொகை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியிருந்தும், நிராகரிக்கப்பட்டவர்கள், விடுபட்டவர்கள், புதிய குடும்ப  பெற்றவர்கள் பலரும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.