தமிழகத்தில் மகளிர்க்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 2.5 லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு இந்த மாதம் 14ம் தேதி சனிக்கிழமை பணம் வழங்கப்படும் 15ம் தேதி விடுமுறை நாள் என்பதால் பணம் வழங்கப்படாது. அதற்கு முந்தைய நாள் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கோடி கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் விடுபட்டவர்கள் விரைவில் சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக தமிழக அரசின் திட்டமான அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி மேலும் ரூபாய் 2000 மொத்தமாக வரும். புதுமை பெண் திட்டம் புதிதாக தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை மூலம் இந்த பணம் வழங்கப்படும். இந்த திட்டம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான இரண்டாம் தவணை இந்த வாரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ரூ.1000 தமிழக அரசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.