Header Ads Widget

<

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மீண்டும் நீட்டிப்பு மாணவர்கள் குஷி


தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வுகள் விடுமுறை நீட்டிப்பு குறித்து முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில்  அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலாண்டு தேர்வு நிறைவடைகிறது. அதன்பிறகு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை, 29ஆம் தேதி ஞாயிறு, செப்., 30 திங்கள், அக்டோபர் 1 ஆம் தேதி செவ்வாய், அக்டோபர் 2ஆம் தேதி புதன் கிழமையாகும்.  அதில் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்து விடுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை ஆகும் . இதனால் காலாண்டு தேர்வு விடுமுறை 2 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் நீடித்து 10 நாட்கள் வரை வழங்க வேண்டும் என ஆசிரியர் தரப்பில் தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் காலாண்டு தேர்வு விடுமுறை 10 நாட்கள் வரை அளிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 5 நாட்கள் மட்டுமே விடுமுறை வருகிறது. அதனால் அக்டோபர் 4, 5 ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டித்தால் சனி, ஞாயிற்று கிழமைகளுடன்  சேர்த்து 9 நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறையாக மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், காலாண்டுத் தேர்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டு காலாண்டு தேர்வு விடுமுறை நீடிக்க வேண்டுமென ஆசியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது; காலாண்டு விடுமுறையை நீட்டித்து தர வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து அக்டோபர் 7ஆம் தேதி திங்கள் கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.