Header Ads Widget

<

கோட் திரைப்படம் இத்தனை கோடி வசூலா? ரசிகர்கள் கொண்டாட்டம்


உலகம் முழுவதிலும் தளபதி விஜய் நடித்துள்ள கோட் (THE GREATEST OF ALL TIME) திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி இன்று பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது . கோட் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விஜயின்  முந்தைய படங்களை விட அதிகமான பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். கோட் திரைப்படம் 333 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் இன்று பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் படம் பிடித்துள்ளது. பல்வேறு தரப்பிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன. இது விஜய்க்கு பெரிய வெற்றி படம் என்று கூறலாம். அதே சமயம் படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எவ்வளவு கோடி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் பொறுத்தவரை வழக்கமாக விஜய் படங்கள் வெளியாகிறது என்றாலே முதல் நாளில் வசூல் ரீதியாக சாதனை படைத்துவிடும். குறிப்பாக, சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான முதல் நாளில் 148 கோடி வரை வசூல் செய்திருந்ததாக கூறப்படுகிறது . அந்த வசூல் சாதனையை கோட் (GOAT) படம் தொடுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில், இதுவரை புக் மை ஷோ  வில் புக் ஆகியுள்ள டிக்கெட் அடிப்படையில் படம் எவ்வளவு கோடி வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதன்படி, கோட் படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 100 முதல் 200 கோடி ரூபாய் வசூல் செய்யும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட் படம் வெளியான முதல் நாளில் 200 கோடி வசூல் செய்தால் கண்டிப்பாக கோட் படத்திற்கு பெரிய சாதனையாக பார்க்கப்படும் என்றே சொல்லலாம். படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் கண்டிப்பாக லியோ படத்தின் மொத்த வசூலான 600 கோடிகளை தாண்டி விஜயின் சினிமா வரலாற்றில் 1000 கோடி ரூபாய் அதிகம் வசூல் கொடுத்த படம் என்ற சாதனையை படைக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமை இந்த படத்திற்கு கிடைக்கும்.