Header Ads Widget

<

கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 இல்லத்தரசிகள் மகிழ்ச்சி சூப்பர் அறிவிப்பு!!


நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பாக பிரதமர்  திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் சமையல் சிலிண்டரின் விலை சில மாதங்களுக்கு முன்பு 1000 ரூபாயைத் தாண்டி இருந்தது. தற்போது பெரும்பாலான நகரங்களில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.850 வரை உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிக விலை கொடுத்து கேஸ் சிலிண்டர்களை வாங்க சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், பெட்ரோலிய நிறுவனங்கள் காம்போசிட் கேஸ் சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

10 கிலோ எடை கொண்ட இந்த காம்போசிட் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த காம்போசிட் சிலிண்டர் கிடைக்கிறது. சாதாரண வீட்டு சிலிண்டரை விட இந்த கேஸ் சிலிண்டரின் விலை ரூ.350 வரை குறைவாக உள்ளதால் இதை வாங்குவது ஏழை மக்களுக்கு எளிதாக இருக்கும். இது தீர்ந்தவுடன் வேறு ஒரு சிலிண்டரை உடனே வாங்கிக் கொள்ளலாம். இந்த காம்போசிட் சிலிண்டரின் சிறப்பு என்னவென்றால், இது வெளிப்படையானது. மேலும், அதை தூக்குவதற்கு லேசாக இருக்கும். சிலிண்டரில் கேஸ் முடிவதாக இருந்தால் அதை நம்மால் முன்கூட்டியே பார்க்க முடியும். வணிக சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, மக்கள் ஒவ்வொரு மாதமும் விலை குறையுமா என்று எதிர்பார்க்கின்றனர். எரிவாயு பயன்பாடு குறைவாக உள்ள வீடுகளுக்கு இந்த சிலிண்டர் நல்ல தேர்வாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த காம்போசிட் கேஸ் சிலிண்டர் அனைத்து சந்தைகளுக்கு இன்னும் வரவில்லை. விரைவில் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.