Header Ads Widget

<

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இத்தனை நாட்களா? குட் நியூஸ்



தமிழகத்தில் பள்ளிகளுக்கு இந்த  ஆண்டுக்கான (2024-2025) காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் 2024-2025ஆம் கல்வியாண்டில் செப்டம்பர் மாத இறுதியில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது காலாண்டில் நடத்தப்பட்ட பாடங்கள் அடிப்படையில், தேர்வுக்காக வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். இந்த வினாத்தாள்கள் தயாரிக்க பிரத்யேக குழு நியமிக்கப்பட்டு அவர்கள் கலந்து ஆலோசித்து வினாத்தாள்களை தயாரிப்பார்கள். இந்த வினாத்தாள்கள் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படும். இவை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த நிலையில் நடப்பு காலாண்டில் தேர்வுக்காக கால அட்டவணை மற்றும் விடுமுறை குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
 
செப்டம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. செப்டம்பர் 7 சனி - விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 16-ஆம் தேதி திங்கள்  மிலாடி நபி வருகிறது. இந்த மிலாடி நபி விடுமுறை முடிந்த 4-வது நாளில் காலாண்டு தேர்வு அல்லது முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படும். முதல் நாள் செப்டம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல் பாடத்திற்கான காலாண்டு தேர்வு நடைபெறுகிறது. அடுத்த 2 நாட்கள் வார விடுமுறை வருகிறது. இதன் பிறகு செப்டம்பர் 23-ஆம் தேதி  திங்கள் கிழமை  அன்று அடுத்த பாடத்திற்கு தேர்வு நடத்தப்படும். இந்த ஒருவாரத்தில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று கடைசி தேர்வு நடத்தப்படும். இதையடுத்து காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இம்முறை 4 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. அதன்படி செப்டம்பர் 29, 30, அக்டோபர் 1, 2, 3 இதில் ஒருநாள் வாரவிடுமுறை வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும்.