Header Ads Widget

<

தமிழக ரேஷன் கடைகளில் விற்பனைக்கு வரும் புதிய பொருள்கள் குஷி அறிவிப்பு




தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் ஆகியவற்றுடன் கூடுதலாக புதிய பொருள்கள் விற்பனைக்கு வரவுள்ளன. தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ்  குடும்ப   அட்டைதரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக  அரிசி இலவசமாகவும் துவரம் பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆவின் பால் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆவின் அதிகாரிகள் கூறியதாவது : - ஆவின் தயாரிப்புகளை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய இருக்கிறோம். தற்போது ஆவின் தயாரிப்புகள், பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. நியாய விலை கடைகளில் இட வசதி மற்றும் இதர வசதிகளை ஆய்வு செய்த பிறகு ஆவின் தயாரிப்புகளை விற்பனை செய்யவுள்ளோம். விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆவின் பொருள்களை விற்பனை செய்யப்படும். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் ரேஷன் கடைகளில் விற்கும் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த  நிலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதன்படி, நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராகி எனப்படும் கேழ்வரகை வெளிமாநிலங்களில் இருந்து இந்திய உணவு கழகம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நியாயவிலைக் கடைகளுக்கு முதல், இரண்டாம் வெள்ளி கிழமைகளிலும் மூன்றாவது, நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை என்று இருப்பதை மாற்றி ஒரே கிழமையில் விடுமுறை அளிப்பது குறித்து பணியாளர்கள் சங்கங்களிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றார். மேலும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு GPAY PAYTM UPI மூலம் பணம் செலுத்தும் முறையை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சில ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது எடை குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள்  தொடர்ந்து வருகின்றன. இதை தீர்க்கும் வகையில், பொருட்களை பாக்கெட் செய்து  விற்பனை செய்ய உணவுப்பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அடுத்தக்கட்டமாக சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளிலும் தலா 1 ரேஷன் கடையை தேர்வு செய்து பாக்கெட் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நியாயவிலை கடைகளில் கை விரல்ரேகைக்கு பதில் கண் கருவிழி மூலம் ஸ்கேன் செய்து பொருள்களை விற்பனை செய்யும் நடைமுறை வரவுள்ளதாக கூறப்படுகிறது.