கும்ப ராசிக்காரர்களுக்கு எந்த ராசி காதல் திருமண பொருத்தம் அமையும் என்றும், எந்த ராசி பொருந்தாது என்றும் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். வாழ்க்கை துணை என்பது ஒரு சிலருக்கு சொந்தத்திலோ, ஒரு சிலருக்கு அந்நியத்திலோ, ஒரு சிலருக்கு காதல் மூலமாகவோ அமையக் கூடும். ஆனால் ஜாதகப்படி எந்த ராசிக்கு எந்த ராசி திருமண வாழ்க்கையில் பொருத்தம் அமையும் என்பது முக்கியமாகும். அந்த வகையில் கும்ப ராசிக்கு மீனம் மற்றும் மகரம் ராசிக்காரர்களை திருமணம் முடித்தால் வாழ்க்கை மிகவும் நன்றாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். வீட்டில் செல்வம் பெருகும். ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். கவலை இல்லாத வாழ்க்கை, வசதியான வாழ்ககையும் அமையும். மனதில் நிம்மதி எப்போதும் இருக்கும்.
கும்ப ராசி உடையவர்கள் உங்களுடைய கும்ப ராசியிலேயே ஒருவரை காதலித்தாலோ, அல்லது திருமணம் செய்தாலோ கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். இருவருக்கும் ஏகா பொருத்தமாக இருக்கும். யோகா பலன்கள் பெறுவதில் தாமதமாகும். அதே போல அடுத்ததாக பொருந்தாத ராசிகள் என்று பார்த்தால் கன்னி மற்றும் கடகம் ஆகும். இந்த ராசிகாரர்களை காதலித்தாலோ, அல்லது திருமணம் செய்தாலோ அடிக்கடி மன உளைச்சல், கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் வரக்கூடும். இதனால் வாழ்க்கை துணை பிரியும் நிலை ஏற்படலாம். ஒரு வேலை தெரிந்தோ தொரியாமலோ கும்ப ராசிக்காரர்கள் கன்னி மற்றும் கடக ராசி உள்ளவர்களை திருமணம் முடித்தால், வாழ்க்கை முழுவதும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
கும்ப ராசி உடையவர்கள் உழைப்பும், நேர்மையும் கொண்ட இவர்களுக்கு காதல் விஷயங்கள் கூடுதல் கவனத்தோடு வரக்கூடும். நம்பிக்கையோடு இருக்கும் இவர்களுக்கு காதல், திருமணம் போன்றவற்றில் மனதிற்கு பிடித்தவர்களையே கரம் பிடிப்பார்கள். பெருந்தன்மையுடன் நல்ல ஒழுக்கம் இவர்களுக்கு இருக்கும். கும்ப ராசி ஆணின் ஜாதகத்தில் 10ஆம் இடம் அல்லது 10ஆம் அதிபதி அமர்ந்த ராசி எதுவோ அதுவே அவரின் காதலி, மற்றும் மனைவி ராசியாக இருக்க வேண்டும். பெண் ஜாதக சுக்கிரன், ஆண் ஜாதக சுக்கிரனுக்கு 2, 12 அல்லது 6, 8 இருக்க கூடாது. காதல் மற்றும் திருமணம் செய்யும் போது, உங்களுக்கான நல்ல சூழல் ஏற்படும் நேரம், திசை புத்திகள் மற்றும் கிரகங்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்யும் இதை புரிந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள், நல்லதே நடக்கும். நன்றி வணக்கம்.