Header Ads Widget

<

இந்தியன் 2 படம் பற்றி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து | INDIAN 2 KAMALHASAN MOVIE NTK SEEMAN SPEECH NEWS


உலகமே எதிர்பார்த்த உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 வெளியாகியுள்ள நிலையில், சிறப்பு காட்சியில் கமலஹாசனுடன் சேர்த்து பார்க்க நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் படம் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில்,  ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல  விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் மத்தியில் குறை கூறும் நெகட்டிவ்  விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஆனால் கமல் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தை ஒப்பிடுகையில் இந்தியன் 2 படம் சற்று சுமாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் படம் 3 மணி நேரம் இருப்பதாகவும், அனிருத் இசை சொல்லும்படி இல்லையென்றும் படம் பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியன் 2 கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சிறப்பு கட்சியில் கமலஹாசன் உடன் சேர்ந்து பிரபல இயக்குனரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் 'இந்தியன் 2' படத்தை பார்த்துள்ளார். அப்போது அவர் படம் பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் கூறுகையில்; இந்தியன் 2 படத்தில்  கமலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கமல்ஹாசன் திரைக்கலை அறிவியலின் அற்பத்த குழந்தை. அவர் நல்ல படைப்பாளியும் ஆவார். நமக்குள் இருக்கும் பிரச்னையை கேட்க யாராவது வருவார்கள் என்ற நிலை இன்னும் இருக்கிறது. அப்படிதான் மக்கள் பார்க்கிறார்கள். நம்முடைய நிலம், நீர் போன்றவற்றில் பாதிப்பு இருந்தால் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய வீட்டை சரி செய்ய வேண்டும் என்ற இந்தியன் 2 திரைப்படம் வலியுறுத்துகிறது.  படம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கிறது என்று தனது கருத்துக்களை தெரிவித்தார்.