Header Ads Widget

<

ஜூலை மாதம் 2024 மேஷ ராசி பலன்கள் யோகம் வருது

மேஷம் : (MESHAM) ஜூலை மாதம் 2024 மேஷ ராசிக்காரர்கள் தங்களின் கடின உழைப்பின் மூலம் ஆதாயம் பெறுவார்கள். இந்த மாதம் போதுமான  வருமானம் இருக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் உங்களின் மதிப்பு  மரியாதை கூடும். உங்கள் ராசிக்கு சனிபகவான் சில அழுத்தம் கொடுப்பார். இருந்தாலும் நீங்கள் சவால்களை சமாளிப்பீர்கள். உங்கள் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் லாபம் அடைவீர்கள். உங்கள் வணிகம் இந்த ஜூலை மாதம் வெற்றி பாதைக்கு செல்லும். உங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்கள் ராசிக்கு சூரிய பகவானின் அனுக்கிரகத்தால், அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.



மேஷ ராசிக்கு செவ்வாய் பகவானின் பார்வையால் சிறு சிறு  பதற்றம் ஏற்படலாம். தேவையில்லாத மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இதையெல்லாம் விலக்கி விட்டு உங்களின் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இந்த மாதம்  சில சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. காதல் உறவுகளில் இறக்கம் ஏற்படக்கூடும். உங்களின் அன்புக்குரியவர்களிடம் கடிந்து கொள்ள வேண்டாம். அன்பாக பேசி பிரச்சனையை சமாளிக்க வேண்டும். உங்களின் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சில மருத்துவ செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு இந்த மாதம்  படிப்பில் ஏற்றம் காண்பார்கள். அவர்களின் கல்வி தரம் உயரும். பெண்களுக்கு இந்த ஜூலை மாதம் சிறப்பாக இருக்கும். சுறு சுறுப்பாக செயல்படுவார்கள். குடும்பத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம் : சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வர தடைகள் நீங்கி நன்மை உண்டாகும்.