Header Ads Widget

<

குடும்ப தலைவிக்கு ரூ.1000 புதிய விண்ணப்பங்கள் முக்கிய அறிவிப்பு | KUDUMBA THALAIVI MAGALIR URIMAITHOGAI RS.1000 NEWS


தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் மாதம் தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் வரும் பணத்தில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2.30 லட்சம் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளனர்.

இதில் புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள், முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், தகுதி இருந்தும் விண்ணப்பிக்க தவறியவர்கள்  என்று புதிதாக சேர்க்கப்படவுள்ளனர். மேலும் புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ரேஷன் அட்டைப் பெற்ற கையோடு மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது. எனவே அனைத்து மகளிருக்கும் பணம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25000 வீதம் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50000 வைப்பு தொகையாக பத்திரம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்த்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட சமூக நல அலுவலகம், குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலகம், கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அலுவலகத்தில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் புதுமை பெண் திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும், இதே போல தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000  வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.