
மேஷம் ராசி : (ARIES HOROSCOPE GURUPEYARCHI PALANGAL 2024-2025) மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மே மாதம் 1ஆம் தேதி தொடங்கி 2025ம் வருடம் மே மாதம் 13ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் குருபகவான் உங்களுக்கு கலவையான பலன்களை தரப்போகிறார். நீங்கள் எடுக்கும் முடிவுகள் புத்திசாலித்தனமாகவும், விவேகமாகவும் இருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்டம் கூடும். இந்த குருபெயர்ச்சி காலத்தில் உங்களின் நிதி பற்றாகுறை குறைந்து, வருமானம் அதிகரிக்கும். இந்த வருடம் உங்களின் காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் சில போராட்டங்களை எதிர்கொள்ளலாம். பிள்ளைகளுக்கு சில நேரங்களில் உடல் நிலை சரியில்லாமல் போக வாய்ப்பு உண்டு. நீங்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் மறைமுக எதிரிகளை சந்திக்க நேரிடும். இந்த வருடம் அக்டோபர் 9ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 4ம் தேதி 2025 வரை உங்களுக்கு நிதி பற்றாகுறை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்காக கவலைபட வேண்டாம். குருபகவான் நன்மை தரும் கிரகம் என்பதால், உங்களின் உடல் உபாதைகள் மற்றும் தீராத நோய்களை தீர்த்து வைப்பார். மருத்துவ செலவுகள் குறையும். பொன் பொருள் ஆபரணம் வாங்கி சேர்ப்பீர்கள். எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பீர்கள். தொழிலை பொறுத்தவரை சிறிது சிறிதாக வளர்ச்சி அடையும். உங்களின் புத்திசாலித்தனதின் மூலம் நல்ல லாபம் காண்பீர்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டில் ரிஷப ராசியில் குருபகவான் தாக்கத்தால் உங்களின் தொழிலில் வரும் பிரச்சனைகள் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். உங்களிடம் இருக்கும் கடன்களை சமாளிக்கவும், எதிரிகளை வெல்லவும் சக்தி கிடைக்கும். இதனால் உங்களின் வணிகம், தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்ல வழிவகுக்கும். 2ஆம் வீடான ரிஷப ராசியில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பணியிடத்தில் சுதந்திரத்தையும், மன உறுதியையும் பெறுவீர்கள். நீங்கள் திருமணத்திற்காக காத்திருப்பீர்கள் என்றால் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல செய்தி வரும். சிலருக்கு திருமணம் நடக்கும். காதலிப்பவர்களுக்கு காதல் விருத்தி அடையும். குடும்ப நபர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிறரிடம் பேசும் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். ஆண்டின் இறுதியில் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வரலாம், பொறுமையாக இருங்கள். 2025ஆம் ஆண்டில் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பையும் காதலையும் பெறுவீர்கள். பெண்களுக்கு இந்த குருபெயர்ச்சி மன உறுதி, முன்னேற்றத்தை தரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.