Header Ads Widget

<

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அடுத்த ட்விஸ்ட் | TAMILAGA VETRI KAZHAGAM MEMBERSHIP APP JOIN NEWS


தமிழகத்தில் சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் மிகப்பெரிய நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். தற்போது அவர் கடந்த மாதம் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் (TAMILAGA VETRI KAZHAGAM) என்று அக்கட்சிக்கு பெயர் சூட்டினார். இந்த நிலையில் வரும்  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலே  என்னுடைய இலக்கு என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து தனது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த தமிழக வெற்றிக் கழக செயலி விஜய் அறிமுகப்படுத்தியதும், இதுவரை 50 லட்சம் பேர் (ஐம்பது லட்சம்) உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நாளுக்கு நாள் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியும் 1 கோடிக்கும் மேலான உறுப்பினர்கள் இந்த கட்சியில் சேரலாம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய சில நாட்களில் இத்தனை உறுப்பினர்கள் சேர்ந்தது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பிரமிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் நூருல்  ஹசன் பைசல் தமிழக வெற்றிக் கழக கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டார். அவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகன் ஆவார். மேலும் விஜய்க்கும் பைசலை ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் விஜய், நாசரின் வீட்டிற்கு சென்று பைசலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனாலயே நூருல்  ஹசன் பைசல் தமிழக வெற்றிக் கழக கட்சியில் உறுப்பினராக இணைத்து கொண்டுள்ளார். இவை சினிமாத்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் விஜய் தனது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக கட்சியில் உள்ள நிர்வாகிகளும் இதற்காக தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்ட மன்ற தேர்தலில்  விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனி முத்திரை பதிக்கும் என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.