Header Ads Widget

<

ஏப்ரல் 2024 துலாம் ராசி பலன்கள் அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுது | APRIL MONTH THULAM RASI PALAN 2024 IN TAMIL



துலாம் : (THULAM - APRIL MONTH 2024 LIBRA HOROSCOPE IN TAMIL) துலாம் ராசி நண்பர்களே இந்த ஏப்ரல் மாதம் 2024ஆம் ஆண்டு உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு சாதகமாகவே அமையும். உங்களின் தொழில் வளர்ச்சி பெரும். குருபகவானின் பார்வையால் மாத தொடக்கத்தில் பல நன்மைகளை பெறுவீர்கள். அதே நேரத்தில் சூரியன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் தாக்கத்தால் மறைமுகை எதிரிகள் உங்களை தொந்தரவு செய்யலாம். பணியிடத்தில் உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த நினைப்பார்கள். ஆனால் உங்களின் புத்திசாலித்தனத்தால், எதிரிகளை உங்களிடம் அடிபணிய வைப்பீர்கள். உங்களின் வேலைகளை திறம்பட செய்வீர்கள். இந்த ஏப்ரல் மாதம் சனியும் செவ்வாயும் இருப்பதால் சில கவன சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் முயற்சி செய்து படித்தால் மட்டுமே, தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். பொறியியல்  சம்பந்தபட்ட மாணவர்கள் திறம்பட விளங்குவார்கள். அவர்களுக்கு சில சாதகமான சூழல் அமையும். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் 5ஆம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் சில பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தும். அதே நேரத்தில் சில குழப்பங்கள் வரலாம். ஆகவே எதையும் நினைத்து மனதை குழப்பமடைய வேண்டாம்.

தொழில் துறையை பொறுத்தவரை இந்த மாதம் சாதகமாக இருந்தாலும், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடம், வீடு மனை விற்பனை ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு சனியின் தாக்கத்தால் உங்கள் காதல் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். எனவே  உணர்ச்சிவசப்பட்டு யாரையும் பேச வேண்டாம். குரு மற்றும் புதன் பார்வையால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இந்த மாதம் உங்களின் வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் வராத பணம் வந்து சேரும். பெண்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். நகை ஆபரணம் வாங்கி மகிழ்ச்சியடைவார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிற்று கோளாறுகள் ஏற்படலாம். செரிமான பிரச்சனைகள் வரலாம்.  ஆகவே உணவு பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்கவும்.  மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இருக்காது. இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.