தமிழக வெற்றி கழகம் (TVK) என்ற பெயரில் நடிகர் விஜய் (ACTOR VIJAY) தொடங்கியுள்ள நிலையில் விஜய் அரசியல் பயணத்தில் நீடிக்க வேண்டுமானால் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தமிழகத்தின் உச்ச நடிகர்களின் பட்டியலில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தளபதி விஜய். தனது சினிமா துறையில் ஏராளமான ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர். ஆனால் ரசிகர் கூட்டம் மட்டுமே நம்பி அரசியலில் ஜெயிப்பது கடினம். விஜய்க்கு மக்களிடமும் நல்ல செல்வாக்கு இருந்தாலும், தற்போதுள்ள பல அரசியல் கட்சிகளை எதிர்கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் சவாலான பணியாகும்.
முதலில் விஜய் மக்களிடம் நம்பகத்தன்மையை பெற வேண்டும். தமிழகத்தில் அனைத்து இடங்களுக்கு சென்று தீவிரமாக களப்பணிகளை கிராம அளவில் அவர் முன்னெடுக்க வேண்டும்.
எந்த ஒரு சவால்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். விமர்சனங்கள், அவதூறுகள், கேலி கிண்டல்கள் ஆகியவற்றை தங்கி கொள்ள வேண்டும். தனது ரசிகர்களிடமும் உணர்ச்சி வசப்படக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், முன்னாள் MLA க்கள், தமிழக வெற்றி கழகத்தில் (TAMILAGA VETRI KALAGAM) ஐக்கியமாகி சீட் வாங்கிட முன் வரவேண்டும். அந்த நேரத்தில் சந்தர்ப்பவாதிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சற்று தள்ளி இருக்க வேண்டும்.
விஜயை பொறுத்தவரை தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகம் பேச மாட்டார். ஆனால் அரசியல் வாழ்க்கையில் அப்படி இருக்க கூடாது. மக்களை கவரும் வகையில் பேச்சு திறமையில் திறம்பட செயல்பட வேண்டும்.
தமிழக மக்களின் வாழவதார பிரச்சனைகளை விஜய் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். நாட்டு நடப்பு விஷயங்கள், பொருளாதாரம், வரலாறு போன்ற புள்ளி விவரங்களை துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தமிழக மக்களை கவரும் வகையில் முற்போக்கு சிந்தனைகள், திட்டங்களை வைத்திருக்க வேண்டும்.
அரசியல் பணியை தொடர முடியாத அளவுக்கு நாலாபுறமும் சிக்கல்கள் வரும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற மனதைரியம் பெற்றிருக்க வேண்டும்.