ரிஷபம் : (RISHABA RASI - MARCH MONTH TAURUS HOROSCOPE IN TAMIL 2024) ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த மார்ச் மாதத்தின் முற்பகுதியில் பயண வாய்ப்புகள் ஏற்படலாம். வியாபாரம் சம்பந்தமாக பயணம் செய்வது உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். உங்களின் வியாபாரம் வலுவடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு இந்த மாதம் சூரியன், சனி, புதன் 10ஆம் வீட்டில் உள்ளதால் பணியிடத்தில் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த மாதம் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். மாத தொடக்கத்தில் வருமானம் நன்றாக இருக்கும். உங்களின் வருமானத்திற்கு ஏற்ப செலவுகள் செய்வதில் உங்களுக்கு பக்குவம் இருக்கும். இதனால் உங்கள் பல பிரச்சனைகள் நீங்கி வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். காதல் உறவுகளில் சில பிரச்சனைகள் வரலாம். இந்த மாதம் ராகு, கேது, செவ்வாயின் ஆதிக்கத்தால் மாணவர்களின் படிப்பில் கவனம் செலுத்துவதில் தடைகள் ஏற்படலாம். எனவே மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் ராசிக்கு புதன் 10ஆம் வீட்டில் அமர்வதால், பூர்வ ஜென்ம தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களிடம் நல்ல பரஸ்பரம் உண்டாகும். அதே சூரியன், சனி, புதன் ஆகியவை நான்காம் வீட்டில் பார்வை படுவதால், குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்படலாம். சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே நீங்கள் இந்த மாதம் யாரிடமும் கோவம் சண்டை கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. இதுவும் கடந்து போகும் என்று விட்டு விடுங்கள். ரிஷப ராசிக்கு மார்ச் மாதம் கேது பகவான் மாதம் முழுவதும் 5ஆம் வீட்டில் உள்ளதால் காதலிப்பவர்களுக்கு ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். இந்த நேரம் திருமண வாழ்க்கையில் சில பதற்றத்தை ஏற்படுத்தலாம். வாழ்க்கை துணையுடன் சண்டை வரலாம். ஆகவே அனுசரித்து செல்வது நல்லது. குரு பகவான் 12ம் வீட்டில் இருப்பதால் வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். உங்கள் விருப்பங்கள் தொடர்ந்து நிறைவேறும். இந்த மாதம் ராகு, கேது ஆதிக்கம் இருப்பதால் உங்களின் உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். ஆகவே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். நல்ல சத்தான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.