Header Ads Widget

<

மார்ச் 2024 விருச்சிக ராசி பலன்கள் கோடீஸ்வர யோகம் உண்டு | MARCH MONTH VIRUCHIGA RASI PALANGAL 2024 IN TAMIL



விருச்சிகம் : (VIRUCHIGAM - MARCH MONTH SCORPIO HOROSCOPE 2024 IN TAMIL) விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் 2024ல் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மார்ச் மாதம் உங்களின் தைரியமும் துணிச்சலும் வெளிப்படும். உங்கள் நண்பர்களிடம் அதிக நேரம் செலவிடுவீர்கள். இதனால் மனதில் மகிழ்ச்சி பெருகும். தொழில் மற்றும் வியாபாரம் மூலம் கிடைக்கும் லாபத்தின் மூலம் உங்களின் வருமானம் அதிகரிக்கும். இதனால் பணத்தை சேமிக்கும் எண்ணம் வரும். 

இதுநாள் இருந்து வந்த தடைகள் நீங்கும். எடுக்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும். தடைபட்ட பணிகள் நிறைவடையும். இந்த மாதம் சுப செலவுகள் அதிகரிக்கும். வெளி நாடு செல்ல விரும்புவோருக்கு இந்த மாத பிற்பகுதியில் சாதகமாக உள்ளது. மாத தொடக்கத்தில் சூரியன், சனி, புதன்  ஆகிய கிரகங்களின் தாக்கம் இருப்பதால்,  செய்யும் வேளைகளில் சற்று தாமதமாக இருக்கும். நீங்கள் உங்கள் சோம்பேறி தனத்தை விட்டு விட்டு கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் வெற்றியை காண முடியும்.


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் 2024ன் ஜாதகப்படி, மாதத்தின் பிற்பகுதியில் 5ஆம் வீட்டில் ராகுவுடன் சுக்கிரன் மற்றும் புதன் இருப்பதால், மன உளைச்சல்கள் வந்து போகும். இதன் மூலம் பல படிப்பினை பெறுவீர்கள். சூரியன், புதன் மற்றும் சனி ஆதிக்கத்தால் குடும்பத்தில் சில  குழப்பங்கள் வரலாம். பதற்றம் அதிகரிக்கலாம். எனவே நீங்கள் எதையும் மனதில் வைத்து கொள்ளவேண்டாம். இதுவும் கடந்து போகும் என்று விட்டு விடுங்கள். உங்களின் பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதத்தில் 5ஆம் வீட்டில் ராகு பகவான் இருப்பதால், காதல் உறவுகளில் சிறு பிரச்சனைகள் வந்தாலும் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள். திருமணம் ஆனவர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியாக இருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களின் கல்வி இந்த மாதம் ஏற்ற தாழ்வாகவே இருக்கும். பெண்களுக்கு இந்த மார்ச் மாதம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் வேலையை எளிதாக முடிப்பீர்கள். பணத்தை சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை நீண்ட நாள் இருந்து வந்த நோய்கள் நீங்கும். ஆனால் ராகு, சூரியன், புதன் கிரக தாக்கத்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். மற்றபடி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.