மிதுனம் : (MITHUNAM - MARCH MONTH GEMINI HOROSCOPE IN TAMIL 2024) மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் 2024 மாதம் தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். இந்த மார்ச் மாதம் வெளியூர் பயணங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் செல்வதன் மூலம் மனதில் உற்சாகம் பிறக்கும். உடன் பிறப்புக்கள் மூலம் நல்ல அனுகூலத்தை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இந்த மார்ச் மாதம் ராகு பகவான் 10ஆம் வீட்டில் இருப்பதால், உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீர்வு காண்பதில் உங்களுக்கு உதவுவார். உங்கள் வாழ்க்கையில் சவால்கள் வந்தாலும் அனைத்தையும் திறம்பட கையாளுவீர்கள். உங்கள் ராசிக்கு குருபகவான் 5ஆம் வீட்டில் இருப்பதால், நினைத்த காரியங்கள் தடைகள் இன்றி நடைபெறும். மேலும் மாணவர்களுக்கு கல்வியை எளிதாக பெறுவார்கள். படிப்பில் நன்றாக கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டை பெறுவீர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சாதகமான பலன்களை தரும். இந்த கால கட்டத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தரும்.
உங்கள் ராசிக்கு குருபகவானின் பார்வையால், கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அன்புக்கரம் நீட்டுவர். காதலிப்பவர்களுக்கு காதல் திருமணத்தில் முடியும். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு சுக்கிரனுடன் செவ்வாய் இருப்பதால், நீங்கள் சில காலம் திருமணத்திற்கு எதிரான உறவுகளை நோக்கி நகரலாம். சுக்கிரன் மற்றும் செவ்வாய் 8ஆம் வீட்டில் இருப்பதால், செலவுகள் ஏற்படலாம். இதனால் உங்களின் நிதி நிலை பாதிக்கப்படலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு 9ஆம் வீட்டில் சூரியன், சனி, புதன் இருப்பதால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சில கோளாறுகள் வந்து போகும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. எனவே தகுந்த நேரத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது. உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியமாகும். மிதுன ராசி பெண்களுக்கு இந்த மாதம் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள். குடும்பத்தில் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும். அதே நேரத்தில் வீட்டில் நடக்கும் விஷயங்களை வெளியில் சொல்வதை தவிர்க்கவும்.