மேஷம் : (MESHAM - ARIES HOROSCOPE MARCH MONTH 2024) மேஷ ராசிகாரர்களுக்கு இந்த மார்ச் மாதம் முற்பகுதியில் மிக நன்றாக இருக்கும். மாதம் தொடக்கத்தில் செவ்வாய் சுக்கிரன் பத்தாம் வீட்டில் பெயர்ச்சிப்பதால் வேலை செய்யும் இடத்தில் வெற்றியை கான்பீர்கள். எதிலும் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல பரஸ்பரம் உண்டாகும். உங்கள் ராசியில் 12ம் வீட்டில் ராகு இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். அதே நேரத்தில் 11ம் வீட்டில் சனி, சூரியன், புதன் இருப்பதால் வருமானத்தை அதிகரிக்கும். ஆனால் காதல் விவகாரங்களில் பதற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாத பிற்பகுதியில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த கால கட்டத்தில் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். எனவே மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும்.
4ஆம் வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் தாக்கம் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி மனதில் கவலை குறையும். சூரியன், சனி, புதன், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவற்றின் கூட்டு செல்வாக்கு 5ஆம் வீட்டை பாதிக்கும், இது உங்களின் காதல் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும். மேலும் கணவன் மனைவி இடையே ஓருருவருக்கொருவர் வாக்குவாதம், சண்டை வரும் சூழ்நிலை உருவாகலாம். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு குருபகவான் மாதம் முழுவதும் 7ஆம் வீட்டில் இருபத்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் பொருளாதாரம் நன்றாக இருக்கும். ராகு பகவான் 12ம் வீட்டில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாத பிற்பகுதியில் உடல் நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தூக்கமின்மை, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். ஆகவே உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. ஆக மொத்தம் மேஷராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களை பெறுவார்கள்.