கடக ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் 2024ல் குருபகவான் 10ஆம் வீட்டில் மாதம் முழுவதும் நீடிக்கிறார். இதனால் எடுக்கும் முயற்சிகள் தடைகள் இன்றி முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் கான்பீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டை பெறுவீர்கள். உங்கள் அனுபவம் மற்றும் திறமை உங்களின் அடையாளமாக மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வருமானம் சிறப்பாக இருக்கும். விரும்பியதை வாங்குவீர்கள். வியாபாரத்தில் சிறப்பு வாய்ந்தவர்களிடம் தொடர்பு ஏற்படும். 7ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் மாணவர்கள் படிப்பில் திறம்பட செயல்படுவார்கள். கல்வித்தரம் உயரும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் 2024ன் ஜாதகப்படி 10ஆம் வீட்டில் அமர்ந்து 4ஆம் வீட்டை முழுமையாக பார்ப்பதால், இதனால் குடும்ப உறுப்பினர்களிடம் நல்ல பரஸ்பர அன்பு பெருகும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி பெருகும். இந்த மாதம் பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குடும்ப பணிச்சுமை அதிகரித்தாலும், சரியான நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். பெண்கள் இந்த மாதம் தங்களுக்கு பிடித்த தங்க நகைகளை வாங்கி மகிழ்வார்கள். கடக ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் ஏழாவது வீட்டில் உச்சத்தில் இருப்பதால், உங்கள் காதல் விவகாரங்களுக்கு நல்ல ஆற்றலை வழங்குவார். காதலித்தவரையே திருமணம் செய்யக்கூடும்.
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புதன், சூரியன், சனி உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத செலவுகளை மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே நீங்கள் சத்தான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் யோக, தியானம் செய்வது மனதில் அமைதி ஏற்படும்.