தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைப்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 2024-2025ஆம் நிதியாண்டில் 13720 (பதிமூன்று ஆயிரத்து எழுநூற்றி இருபது) கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாதம் மாதம் பெண்களின் வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் உரிமை தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையை பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் கிட்டத்தட்ட சுமார் 1 கோடியே 8 லட்சம் பேர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 2024-25ம் நிதியாண்டில் 13720 (பதிமூன்று ஆயிரத்து எழுநூற்றி இருபது) கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள நிலையில், இதனால் இனி வரும் நாட்களில் கூடுதலாக புதிய பயனாளிகள் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே 2024 ஆம் ஆண்டு புதிதாக சுமார் ஆறு முதல் ஏழு லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ஏழு லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்து பயன்பெற முடியும் என்பதால், புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் புதிதாக விண்ணப்பிப்போருக்கு வருகிற ஏப்ரலில் இருந்து பணம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் கணிசமாக இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் கணிசமானோர் விரைவில் ரேஷன் அட்டை பெறவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான ஆய்வு பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது எனவே அவர்கள் குடும்ப அட்டை பெற்றவுடன், கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்களிடையே மகளிர் உரிமை தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இதுவரை இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள், புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள், மேல் முறையீடு செய்தவர்களும் பயன்பெற முடியும்.