PMAY பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டமானது, இந்திய அரசாங்கத்தின் முதன்மையான மலிவு விலை வீட்டு திட்டமாகும். தற்போதுள்ள கால கட்டத்தில் அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு லட்சியமாக உள்ளது. ஆகையால் பொது மக்களின் கனவை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் சொந்த வீடு கட்ட மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் (PRADHAMA MANTHIRI AWAS YOJANA SCHEME IN TAMIL) பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டமாகும்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும். அதன்படி இந்த திட்டத்தில் இரண்டு வகை உள்ளது.
1. திட்டம் 1ன் படி பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் அர்பன் (URBAN)
2.திட்டம் 2ன் படி பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் கிராமின் (GRAMIN)
இந்த திசையில் பீரோவை வைத்தால் நீங்கள் கோடீஸ்வரர்தான்
தகுதியுடையவர்கள்
* நடுத்தர வருமான குழுக்கள் (MIG I) ஆண்டு வருமானம் ரூ.6-12 லட்சம்
* நடுத்தர வருமான குழுக்கள் (MIG II) ஆண்டு வருமானம் ரூ.12-18 லட்சம்
* குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (எல்ஐஜி ) ஆண்டு வருமானம் ரூ.3-6 லட்சம்
* பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு (EWS) ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம்
* பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு (EWS) ஆண்டு வருமானம் ரூ.MMR மும்பை, மகாராஷ்டிரா மற்றும் ரூ.6 லட்சம்
மானிய தொகை
*பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டதின் அதிகபட்ச மானிய தொகை ரூ.2,67,000 ஆகும்.
* இந்த திட்டத்தின் மானிய தொகை 4 தவணைகளாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
நிபந்தனைகள்
* குடும்பத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் வேறு எந்த வீடு திட்டத்திலும் இருக்க கூடாது.
*LIG மற்றும் MIG பயனாளிகள் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடன் இணைக்கப்பட்ட மானியத்திற்கு மட்டுமே தகுதியுடையவர்கள். EWS பயனாளிகள் முழுமையான உதவிக்கு தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின் கீழ் LIG அல்லது EWS பயனாளியாக அங்கீகரிக்கப்படுவதற்கு விண்ணப்பதாரர் தனது வருமான சான்றிதழை ஆதரிக்கும் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
* இந்த திட்டத்தில் 25 சதுர மீட்டர் அல்லது 269 சதுர அடிகள் இடம் இருக்க வேண்டும்.
* ஒரு வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை இடம் பெற்றிருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
* ஆதார் கார்டு
* வங்கி கணக்கு புத்தகம்
* முகவரி சான்று
* வருமான சான்று
* சொந்தமாக இடம் (பட்டாவுடன்) இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பது எப்படி
1.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.