Header Ads Widget

<

மார்ச் 2024 துலாம் ராசி பலன்கள் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் | MARCH MONTH THULAM RASI PALANGAL 2024 IN TAMIL



துலாம் : (MARCH MONTH 2024 LIBRA HOROSCOPE IN TAMIL) துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் 2024ல் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை உணருவீர்கள். இந்த மாதம் அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் பணித்திறமை அதிகரிக்கும். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். நீங்கள் புதிய வாகனங்களுக்கு முன்பதிவு செய்திருந்தால் இந்த மாதம் புதிய வாகனம் கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உங்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் வெளியூர் பயணங்களில் சில தடைகள் வரலாம். மாணவர்களின் கல்வியில் சவால்களை சந்திக்க கூடும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். சுக்கிரன், செவ்வாய், ராகுவின் பார்வையால் உழைக்கும் மக்களுக்கு நல்ல பலனை பெறுவார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களின் தனிப்பட்ட திறமைகள் மேம்படும். எந்த ஒரு வேலையும் சுலபமாக முடிப்பீர்கள்.


துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் 2024ல் உங்களின் ஜாதகப்படி குருபகவான் மாதம் முழுவதும் உங்கள் ராசியில் 7ஆம் வீட்டில் பார்வையிடுவதால், உங்களின் வணிகம் விரிவடையும். இந்த மார்ச் மாதம் புதிய தொழில் தொடங்கலாம். இதன் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உங்களின் அறிவுத்திறன் மேம்படும். இந்த மாதம் கிரகங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடல் நல பிரச்சனைகள் வரலாம். உடல் செரிமானம் சம்பந்த பிரச்சனைகள் வரலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இருப்பினும் இந்த மாதம் குருவின் பார்வையால் எல்லா பிரச்சனைகளும் நீங்கள் சமாளிக்க முடியும். குருபகவனினால் உங்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். சூரியன், புதன், சனியின் தாக்கத்தால் உங்களின் காதல் வாழ்க்கையில் பதற்றத்தை உண்டாக்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு இந்த மாதம் சுறுசுறுப்பாக இருப்பார்கள். குடும்பத்தில் அனைவரது ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் வாங்கி சேர்ப்பார்கள். 4,5,6 ஆம் வீடுகளில் கிரகங்களின் தாக்கம் இருப்பதால் வாயு, அஜீரணம், கண் சந்பந்தபட்ட பாதிப்புகள் வரலாம் எனவே நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.