சிம்மம் : (SIMMAM - MARCH MONTH 2024 LEO HOROSCOPE IN TAMIL) சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் 2024ஆம் மாதம் உங்கள் ராசிக்கு சூரிய பகவான் சனியுடன் 7ஆம் வீட்டில் இருப்பதால், வாழ்க்கையில் ஏற்றம் இறக்கமாக இருக்க கூடும். இருந்தாலும் குருபகவான் உங்களுக்கு அவ்வப்போது நிவாரணம் தருவார். வெளியூர் பயணங்கள் சாதகமாக இருக்க கூடும். அன்புக்குரியவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் ஆதரவை பெறுவீர்கள். காதலிப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் வரக்கூடும். திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படலாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சுக்கிர பகவான் 6ஆம் வீட்டில் செவ்வாயுடன் பெயற்சிப்பதால் பணிபுரியும் இடத்தில் கடினமாக உழைக்க தைரியம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் அதிக முயற்சிகள் மற்றும் கடின உழைப்பினால் மட்டுமே உங்களுக்கு வெற்றி உண்டாகும். இந்த மாதம் உங்களுக்கு உடல் சோர்வு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் 2024ஆம் மாதம் கணவன், மனைவி இடையே அவ்வப்போது மோதல்கள் வரக்கூடும். எனவே வருமுன் காப்பதே சிறந்தது என்று அமைதியாக இருந்து விடுங்கள்.
குருபகவானின் பார்வை 5ஆம் வீட்டில் உள்ளதால், உடன் பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியை பெறுவீர்கள். இந்த மாத தொடக்கத்தில் செவ்வாய் 6ஆம் வீட்டில் இருப்பதால், சொத்து சம்பந்தமான தகராறுகள் வரலாம். குடும்பத்தில் சில குழப்பங்கள் இருந்தாலும் மாத பிற்பகுதியில் நல்ல நிலை வந்துவிடும். காதல் தகராறில் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். இந்த மாதம் சனியின் பார்வை இருப்பதால் உடல்நலக் கோளாறுகள் வரும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இதனால் உங்களின் நிதி நிலை பாதிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமப்படுவார்கள். மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும். சக மாணவர்களிடம் சண்டை சச்சரவுகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு இந்த மாதம் சவாலாக இருக்கும். பொறுமையும் அமைதியாக இந்த மாதத்தை கடந்து விடுங்கள். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதன் மூலம் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து ஓரளவு சமாளிக்க முடியும். இந்த மாதம் உடல்நலம் பாதிப்பு ஏற்படக்கூடும் என்தால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.