Header Ads Widget

<

மார்ச் 2024 கன்னி ராசி பலன்கள் செல்வம் வந்து சேரும் | MARCH MONTH KANNI RASI PALANGAL 2024 IN TAMIL



கன்னி : (KANNI - MARCH MONTH 2024 VIRGO HOROSCOPE IN TAMIL) கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் 2024 உங்களின் தனிப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். அதே நேரத்தில் தொழில் விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த மாதம் வெளியூர் பயணங்கள் மற்றும் இடமாற்றம் சாதகமாக இருக்கும். தெய்வீக வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள், இதனால் சுப செலவுகள் ஏற்படலாம். உங்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். காதல் உறவுகளில் தீவிரம் காட்டுவீர்கள். சுக்கிரன் மற்றும் செவ்வாய் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்வதால் கவன சிதறல்கள் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த சிரமம் ஏற்படலாம். இதனால் கல்வி நிலை பாதிக்கப்படலாம்.  எனவே அவர்கள் முயற்சி செய்து படிக்க வேண்டும். மாணவர்கள் வரும் சவால்களை எதிர்த்து போரிட வேண்டும். குருபகவானின் பார்வையால் குடும்ப உறுப்பினர்களுடன் பரஸ்பர உறவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இதனால் மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின் பெற்றோர்கள் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். காதல் உறவுகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். காதலிப்பவர்களுக்கு அவர்களுடைய காதல் பெற்றோர்களின் சம்மதப்படி திருமணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் 2024 ஜாதகப்படி மாதத்தின் பிற்பகுதியில் மார்ச் 14ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் ராகுவுடன் சூரியன் அமையும் போது கொஞ்சம் பதற்றம் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வரலாம். அந்த நேரத்தில் நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நல்லது. இந்த மாதம் செவ்வாயுடன் சுக்கிரன் 11ஆம் வீட்டை பார்ப்பதால் இதன் காரணமாக தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வை கான்பீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். இந்த மாதம்  உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்த மாதம் ராகுவின் பார்வை இருப்பதால் உடல் செரிமான பிரச்சனைகள் வரலாம். வயிறு கோளாறு, ரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். எனவே நீங்கள் உங்கள் உடல் நலனில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்தான உணவை தேர்ந்தெடுத்து உண்பது நல்லது. தியானம்,  உடற்பயிற்சி செய்வது அவசியம்.

12 ராசிக்காரர்களின் பலன்கள்