பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வாங்குபவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டு தோறும் ரேஷன் கடைகள் மூலமாக ரூ,1000 ரொக்கப் பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ,1000 ரொக்கப் பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைககளில் விநியோகம் செய்யப்படுகிறது. வருகிற ஜனவரி 10 2024 முதல் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் தொகுப்பை மக்கள் பெற்று கொள்ளலாம் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. மேலும் 13 ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற முடியாதவர்கள், அதற்கு பிறகு வரும் தேதிகளில் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகையும் ஜனவரி 10 ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.