Header Ads Widget

<

தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.



தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்திலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், திருச்சி, கரூர், தேனி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, பெரம்பலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கனமழையின் தீவிரத்தை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.