ரிஷபம் (TAURUS HOROSCOPE) ராசிக்காரர்களுக்கு இந்த பிப்ரவரி மாதம் கலவையான பலன்களை தரும். தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பணவரவு ஓரளவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. இந்த பிப்ரவரி 2024 மாதம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். கடினமாக உழைத்தால்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் சார்ந்த வணிக பயணம் மேற்கொள்ள நேரிடும். செவ்வாய் 8ஆம் வீட்டில் அமர்வதால் தொழில் கூட்டாளிகளிடம் பிரச்சனை ஏற்படலாம். பிறரிடம் பேசும் வார்த்தையில் கவனமாக இருங்கள். அனுசரித்து செல்வதன் மூலம் வீண் வாதங்களை தவிர்க்கலாம். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சசாதகமாக இருக்கும். 5ஆம் வீட்டில் கேது பகவான் இருப்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சற்று தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டி மற்றும் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகையால் எதிலும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது.
கேது பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் 5ஆம் வீட்டில் உள்ளதால் காதல் உறவுகளில் விரிசல்கள் ஏற்படலாம். திருமணம் ஆனவர்களுக்கு தாம்பத்ய உறவு ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எதிலும் முதலீடு செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து செய்வது நல்லது. 7ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் இருப்பதால் சிந்திக்காமல் முதலீடு செய்வது பிரச்சனைகளை உண்டாக்கும். இருந்தாலும் இந்த செவ்வாய் காரணமாக ரகசிய சொத்துக்களை பெறலாம். பெண்கள் இந்த பிப்ரவரி மாதம் பொறுமையாக இருப்பது நல்லது. யாரையும் கடிந்து கொள்ள வேண்டாம். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று விட்டு விடுங்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பிப்ரவரி 2024 உடல் நலனை பொறுத்தவரை சில பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் செய்வதன் மூலம் உங்கள் மனதை பலப்படுத்தலாம்.