மிதுன ராசிக்காரர்களுக்கு (GENIMI HOROSCOPE) இந்த பிப்ரவரி-2024 மாதம் தொடக்கத்தில் பணவரவு அதிகரிக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் தங்கி உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். உங்கள் வேலையில் மாற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இந்த மாதம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை திறமையாக கையாளுவீர்கள். சவால்களை சமாளிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஒன்றாக இருப்பது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை தரும். தொழில் சம்பந்தமான பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். 4ஆம் வீட்டில் கேது பகவான் இருப்பதால் மனதில் சில சந்தேகங்கள் குழப்பங்கள் இருக்க கூடும். அதே போல 10ஆம் வீட்டில் ராகு பகவான் இருப்பதால் குடும்பத்தில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடும். சில நேரங்களில் கணவன் மனைவி இடையை கருத்து வேறுபாடுகள் இருக்க கூடும். உடல் நல பிரச்சனைகளும் வந்து போகும். மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் காதலிப்பவர்களுக்கு காதலில் நல்ல பரஸ்பரம் உண்டாகும்.
இந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு குருபகவான் மற்றும் சுக்கிரன் அருளால் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மாத நடுவில் செவ்வாய் வருவதால் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். இதனால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் இந்த மாதம் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் தடைகள் வரலாம். கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். மருத்துவம் மற்றும் சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். பெண்களுக்கு இந்த மாதம் மனதில் உற்சாகமாக செயல்படுவீர்கள். பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் பணிச்ச்சுமை அதிகரிக்கும். கோபத்தை குறைத்து கொண்டால் பிரச்சனைகளை சமாளிக்கலாம். இந்த பிப்ரவரி மாதம் உடல் நலனில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானை தரிசித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.