Header Ads Widget

<

கடக ராசி பலன் பிப்ரவரி 2024 கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க | FEBRUARY MONTH KADAGAM RASI PALAN IN TAMIL 2024


கடக ராசிக்காரர்களுக்கு (CANCER HOROSCOPE) இந்த பிப்ரவரி மாதம் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் ஏற்றம் இறக்கமாக இருக்கும். பிப்ரவரி மாதம் 2024 தொடக்கத்தில் கடக ராசிக்கு சூரிய, புதன் பகவான் வணிகத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் ராசிக்கு குரு பகவான் இந்த மாதம் முழுவதும் 10ஆம் வீட்டில் இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் நல்ல அனுகூலத்தை தருவார். நீங்கள் பணி செய்யும் இடத்தில் ஈகோவை தவிர்த்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேலை விஷயத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பணவரவு ஓரளவு இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் இருக்கும். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். எதிரிகளை உங்கள் புத்திசாலித்தனத்தால் அடக்குவீர்கள். கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் காதலிப்பவர்களுக்கு காதல் அதிகமாகும். திருமணம் ஆதவர்களுக்கு திருமணம் நடைபெறும். புத்திர யோகமும் உண்டு. சூரியன் சனியுடன் சேர்ந்து இருப்பதால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரலாம். மாமியாரிடம் பிரச்சனை ஏற்படலாம். ஆகையால் நீங்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது நல்லது.

பெண்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களையே தரும். குடும்பத்தில் வேலை பளு அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தையில் கவனமாக இருங்கள். ஆடம்பர செலவுகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எனவே சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. சவால்களை சமாளிப்பீர்கள். யாரையும் கடிந்து கொள்ள வேண்டாம். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று விட்டு விடுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் தடைகள் வரலாம். எந்த தடை வந்தாலும் நீங்கள் மனம் தளராமல் படியுங்கள் வெற்றி தானாக வரும். கடக ராசிக்கு இந்த மாதம் சனி பகவான் 8ஆம் இடத்த்தில் இருப்பதால் உடல் நல பிரச்சனைகள் வந்து போகும். இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. நல்ல சத்தான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது நல்லது. தினசரி உடற்பயிற்சி, தியானம் மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.