Header Ads Widget

<

புத்தாண்டு ராசி பலன்கள் 2024 ரிஷப ராசிக்கு வரப்போகும் அதிர்ஷ்ட யோகம் | NEW YEAR RASI PALAN RISHABAM RASI 2024 IN TAMIL


ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த 2024 ஆம் வருடம் மிகவும் சிறப்பான பலன்களை தரப்போகிறது. ரிஷப ராசியினருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பால் நல்ல லாபத்தை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். திருமண ஆகாதவர்களுக்கு 2024ம் ஆண்டு திருமணம் நடக்கும். திருமண வாழ்க்கையில் மிகவும் சாதகமான உறவு மேம்படக்கூடியதாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மற்றவர்களின் பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். சனிபகவானின் அமைப்பால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் அவரசம் காட்ட வேண்டாம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் திருமண உறவில் சில விரிசல்கள் ஏற்படலாம். ஆகையால் கணவன், மனைவி இடையே அனுசரித்து செல்வது நல்லது. ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த 2024 ஆம் வருடம் நிதி நிலையை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆகவே சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. சிலர் சேமித்து வைப்பதில் கவனம் செலுத்துவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் தேவையற்ற வாக்கு வாத்தங்களை தவிர்க்க வேண்டும்.

இந்த வருடம் மாத பிற்பகுதியில் வண்டி, வாகனம் வாங்க வாய்ப்பு அதிகம். பங்கு சந்தையில் முதலீடு செய்து கணிசமான லாபத்தை பெறுவீர்கள். கடன் வசூலாகும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த  வருடம் சிறப்பாக இருக்கும்.  காதலில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். காதல் கைகூடும். சிலருக்கு காதல் திருமணத்தில் போய் முடியும். பெண்களுக்கு இந்த வருடம் கலவையான பலன்களை தரக்கூடியவையாக இருக்கும். குடும்ப சுமை அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பின் மூலம் சவால்களை சமாளிப்பீர்கள். பிறரிடம் பேசும் வார்த்தையில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தினமும் உடற்பயிற்சி, யோகா செய்வது உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு படிப்பில் சுமாராக இருப்பீர்கள். கவனமுடன் படிக்க வேண்டும். கடின உழைப்பின் மூலவே தேர்வில் வெற்றி பெற முடியும். ஆகவே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். பெரிய அளவில் பிரச்சனைகள் வராது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

பரிகாரம் : குலதெய்வ வழிபாடு அவசியம். சிவபெருமானை வழிபட்டு வர துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

வீட்டில் இந்த திசையில் பீரோவை வைத்தால் செல்வம் பெருகும்