மேஷம் : (MESHAM) மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்ட யோகத்தை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு லாப சனி, ஜென்ம குரு போன்ற கிரகண நிலைகள் பயணம் செய்கின்றன. இதனால் செய்யும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய கடன்களை அடைப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வீடு மனை வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். ராகு பகவான் 12ம் வீட்டிலும், கேது பகவான் 6ம் வீட்டிலும் பயணம் செய்கிறார்கள். இதனால் சிக்கல்கள் நீங்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டு புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். குடும்பத்தில் சந்தோசம் பெருகும்.
பெண்களுக்கு : மேஷ ராசி உடைய பெண்களுக்கு இந்த 2024ம் ஆண்டு நல்ல பலன்களை தரப்போகிறது. இல்லத்தரசிகள் நினைத்த செயல்களை தடைகள் இன்றி முடிப்பீர்கள். புதிய நகைகளை வாங்க யோகம் உண்டு. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் எற்படும். குடும்ப பெண்கள் சுறுசுப்புடன் செயல்படுவார்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
இந்த திசையில் பீரோவை வைத்து பாருங்கள் பணம் கொட்டும்
மாணவர்களுக்கு : மேஷ ராசி கொண்ட மாணவர்களுக்கு இந்த 2024ம் ஆண்டு அற்புத பலன்களை தரக்கூடிய ஆண்டாக அமையும். படிப்பில் முன்னேற்றம் எற்படும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. விரும்பிய படிப்பை தேர்வு செய்து முன்னேற்றம் அடைவீர்கள். சவால்களை சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். இந்த ஆண்டு உங்களின் கல்வித்தரம் உயரும்.
பரிகாரம் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்கவும், முருகப்பெருமானை வழிபடவும்.