Header Ads Widget

<

புத்தாண்டு ராசி பலன் 2024 துலாம் ராசிக்கு வரப்போகும் ராஜயோகம் | NEW YEAR JANUARY MONTH RASI PALAN THULAM RASI IN TAMIL 2024

துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே வருகிற 2024ஆம் ஆண்டு நீங்கள் பல வழிகளில் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகிறீர்கள். இது நாள் இருந்து வந்த அனைத்து கஷ்டங்கள், மன உளைச்சல்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வை இந்த ஆண்டு தரப்போகிறது. குல தெய்வத்தின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்கள் ராசியில் 7ஆம் வீட்டில் குரு பகவான் பார்வையிடுகிறார். இதனால் நிறைய நன்மைகளை தரப்போகிறார்.  குரு பகவானின் இந்த பார்வை உங்களுக்கு ராஜயோகத்தை தரப்போகிறது. உங்களுக்கு பல வழிகளில் பணம் வந்து சேரும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப செலவுகள் அதிகரிக்கும். வீடு, மனை, பொன், பொருள், வாகனம் வாங்க யோகம் உண்டு. தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவடைய முதலீடு செய்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.



பெண்களுக்கு : துலாம் ராசி கொண்ட பெண்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறந்த ஆண்டாக அமையும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள், பிரச்சனைகள் நீங்கி குதூகலம் அடைவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த நீண்ட கால பிரச்சனை முடிவுக்கு வரும். 2024ஆம் ஆண்டு உங்களுக்கு சாதனை ஆண்டாக இருக்கப்போகிறது. இல்லத்தரசிகள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். தங்களுக்கு தேவையான நகைகளை வாங்கி மகிழ்வார்கள். பெண்களின் உடல் ஆரோக்கியம் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் சந்தோசம் பெருகும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆக இந்த 2024ஆம் ஆண்டு பெண்களுக்கு நல்ல அதிர்ஷ்ட யோகத்தை தரப்போகிறது.

மாணவர்களுக்கு : மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறந்த பலன்களை தரப்போகிறது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உயர் கல்வி தொடர்பாக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்கள் மூலம் பாராட்டை பெறுவீர்கள். நீண்ட நாள் இருந்து வந்த மந்த நிலை மாறி படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம் : முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.