மேஷம் : (MESHAM) மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் மனோதைரியம் அதிகரிக்கும். இந்த ஜனவரி மாதம் உங்களின் புதியசாலிதனத்தை கண்டு மற்றவர்கள் வியந்து போவார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பொது வாழ்க்கையில் கவுரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் மூலம் மனதில் நிம்மதி பிறக்கும். தொழில் மற்றும் வியாபரம் கலவையான பலன்களை தரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும், பணவரவு ஓரளவு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதை ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் சில நேரங்களில் பிரச்சனைகள் வரலாம். எனவே அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு இந்த ஜனவரி மாதம் சில சிக்கலான விஷயங்களை கூட உங்களின் திறமையின் மூலம் சுமூகமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் எளிதாக சமாளிப்பீர்கள். அரசியல் துறையினர் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அதே நேரத்தில் புகழ் கௌரவம் உங்களை தேடி வரும்.
இந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு பெரிய மான்களின் சந்திப்பு ஏற்படும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். கல்விக்கு தேவையான பொருள்களை வாங்குவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் மேஷ ராசியினர்க்கு உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
பரிகாரம் : முருகனை வழிபடவும். ராசி பலன்கள்
அதிர்ஷ்டம் தரும் கிழமைகள் : செவ்வாய் புதன் வெள்ளி
சந்திராஷ்டமம் : 8, 9
அதிர்ஷ்ட தினங்கள் : 1, 2, 28, 29