தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி 4 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை 01.12.2023 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 02.12.2023ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் கனமழையின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.