Header Ads Widget

<

டிசம்பர் மாதம் ராசி பலன்கள் 2023 அதிர்ஷ்ட யோகம் பெரும் ராசிகள் | DECEMBER MONTH RASI PALANGAL 2023 IN TAMIL


மேஷம் : (MESHAM) மேஷ ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்க கூடிய மாதமாக அமையும். இந்த மாதத்தில் புதிய தொழில் மற்றும் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாள் இருந்து வந்த தடைபட்ட பணிகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். பொன், பொருள், ஆபரணம், வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு.  மாணவர்கள் கல்வியில் திறம்பட விளங்குவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

ரிஷபம் : (RISHABAM) ரிஷப ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு ஏற்றம் மிகுந்த மாதமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். டிசம்பர் 27ம் தேதி வரை உங்கள் ராசிக்கு செவ்வாய் பகவான் 7ம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு நன்மையாகவே அமையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் பழகும் போது கவனமுடன் இருப்பது நல்லது.  மாணவர்கள் கல்வியில் திறம்பட விளங்குவார்கள். முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாள் இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். 

மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு ஐந்தாம் இடத்தில சுக்கிரன் இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த செயல்கள் சிறப்பாக முடியும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். நீங்கள் அனைவரையும் புரிந்து கொண்டு நடப்பீர்கள். குழந்தைகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

கடகம் : (KADAGAM) கடக ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வதால் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக அமையும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்து வந்த  பிரச்சனைகள் மறந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். பொன், பொருள், ஆபரணம், வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கான்பீர்கள். நீண்ட தூர பயணம் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடியவையாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். உங்களின் ராசிக்கு நான்காம் பாதத்தில் செவ்வாய் அமர்ந்து வீடு, மனை, வாகனம் வாங்க யோகத்தை தரப்போகிறார். நீண்ட நாள் தடைபட்டு இருந்த வந்த பணிகள் முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். செலவுகள் செய்வதில் சிக்கனம் தேவை. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் இந்த மாதம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும்.

கன்னி : (KANNI) கன்னி ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் தனம், செல்வாக்கு, செழிப்பான முன்னேற்றம் அடைவீர்கள். உங்களின் பேச்சுக்கு சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்க யோகம் உண்டு. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பணவரவு அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை உயரும். கணவன், மனைவி அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். காதலிப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சிறிய தடைகள் வந்து போகும். புதிய வேலை தேட முயற்சிர்ப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். 

துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் தரக்கூடிய மாதமாக அமையும். இந்த மாதம் உங்களின் ராசி அதிபதியான சுக்கிரன் அதிக நன்மைகளை தரப்போகிறார். வெளி நாடுகளுக்கு செல்வபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பொன், பொருள், ஆபரணம், வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கான்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். பிறரிடம் பேசும் போது கவனம் தேவை. வாங்கிய கடனை அடைப்பீர்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு செவ்வாய் பகவான் அமர்வதால் உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுப்பார். 12ம் பாதத்தில் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் கணவன், மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நன்றாக இருக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.  மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பிறரிடம் பேசும் வார்த்தையில் கவனம் தேவை. குழந்தைகள் மூலம் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உடல் நலனில் கவனம் தேவை.

தனுசு : (DHANUSH) தனுசு ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு சுக்கிரன் லாப ஸ்தானத்தில் அமர்வதால் பண வரவு அதிகரிக்கும். நினைத்த செயல்கள் தடையின்றி நடக்கும். புதிய தொழில் அமைத்து வெற்றி கான்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பொன், பொருள், ஆபரணம், வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கான்பீர்கள். கணவன், மனைவி அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் திறம்பட விளங்குவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு ராகு பகவான் 3ம் இடத்தில் அமர்ந்து உங்கள் முயற்சிக்கு வெற்றியை கொடுப்பார். நான்காம் அதிபதி லாப ஸ்தானத்தில் அமர்வதால் பண வரவு அதிகரிக்கும். புது வீடு கட்டி புதுமனை புகு விழா நடத்துவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். 3ம் பாதத்தில் குரு பகவான் அமர்வதால் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கணவன், மனைவி இடையே நல்ல பரஸ்பரம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நன்றாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கும்பம் : (KUMBAM) கும்ப ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வரவு கேற்ற செலவுகள் இருக்கும். கணவன் மனைவி இடையே சிறிய சலசலப்பு விரிசல்கள் ஏற்படலாம்.  கணவன், மனைவி அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். வீடு மனை வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். பிறரிடம் பேசும் வார்த்தையில் கவனம் தேவை. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

மீனம் : (MEENAM) மீன ராசி அன்பர்களே இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகளை தகர்த்தெறிந்து வாழ்க்கையை முன்னெடுத்து செல்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதையை அதிகரிக்கும். குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். கணவன், மனைவி அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். நீண்ட நாள் இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

வீட்டில் இந்த திசையில் பீரோவை வைத்தால் நடக்கும் அதிசயம்