கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடும். திருமணத்திற்காக வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பெண்களுக்கு இந்த மாதம் அன்றாட வேளைகளில் சுறுசுப்பாக இருப்பீர்கள். மனதளவில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். தடைபட்ட சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு அதிகரித்தாலும் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். இந்த மாதம் பெண்களின் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் திறம்பட விளங்குவார்கள். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்கள் கிடைக்கும். உயர் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்ள வேண்டும். இந்த மாதம் உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை.
பரிகாரம் : முருகப் பெருமானை வழிபடுவது வாழ்வில் ஏற்றத்தை தரும். இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் மற்றும் தானம் தர்மம் செய்வது மிகுந்த பலனை தரும்.