Header Ads Widget

<

தீபாவளி முன்னிட்டு ரேஷன் அட்டைக்கு புதிய இலவசம் அறிவிப்பு | KUDUMBA THALAIVI MAGALIR DEEPAVALI RATION CARD RS.1000 NEWS


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, சீனி, கோதுமை,  சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பல சலுகைகளை அளித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் புதிதாக ரேஷன் அட்டை  பெற்றவர்களும் இந்த திட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆண்டுதோறும்  தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் மக்கள் பண்டிகைகை சிறப்பாக கொண்டாட  தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள்கள், இலவச வேஷ்டி சேலை மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வரும் பொருள்களுடன் சேர்த்து கூடுதலாக 6 இலவச பொருள்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சீனி, பருப்பு, பாமாயில், ரவை, மாவு, அவல் உள்ளிட்ட பொருட்கள் கூடுதலாக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த தீபாவளி பரிசு பொருட்கள் PHH, PHH - AAY, NPHH குறியீடு கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த பரிசு பொருட்கள் எந்த தேதிகளில் வழங்கப்படும் என்று இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு சார்பில் தீபாவளி பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் எப்போது அறிவிப்பார்கள் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் உள்ளனர். ஏற்கனவே மகளிருக்கு மாதம் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கி வரும் நிலையில், தமிழக அரசு தீபாவளிக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்குவது குறித்து ஆலோசித்து முறையான அறிவிப்பை வெளியிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திசையில் வீட்டு பீரோவை வைத்தால் என்ன நடக்கும்

TAGS : DEEPAVALI GIFT, RATION CARD NEWS, MAGALIR URIMAI THOGAI, KUDUMBA THALAIVI, RATION SHOP NEWS IN TAMILNADU, NEW RATION CARD.