இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வருகிற 14ம் தேதி ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகிறது. இதில் எந்தந்த ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகிறது என்பதை பார்ப்போம்.
மிதுனம் : (MITHUNAM) மிதுன ராசி அன்பர்களே ஜோதிட சாஸ்திரப்படி இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு மிகவும் நன்மை தரப்போகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். மனதில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வீட்டில் பண வரவு அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வேலை பார்க்கும் நிறுவனங்களில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
சிம்மம் : (SIMMAM) சிம்ம ராசி அன்பர்களே ஜோதிட சாஸ்திரப்படி இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு சுப பலன்களை தரப்போகிறது. நீண்ட நாள் நிலுவையிலிருந்த வேலைகள் எல்லாம் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் ஏற்றத்தை காண்பார்கள்.
துலாம் : (THULAM) துலாம் ராசி அன்பர்களே ஜோதிட சாஸ்திரப்படி இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். நினைத்த காரியம் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இந்த கால கட்டத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் மூலம் பல நன்மைகளை பெறுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும்.
விருச்சிகம் : (VIRUCHIGAM) விருச்சிக ராசி அன்பர்களே ஜோதிட சாஸ்திரப்படி இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு மிகவும் நம்பிக்கையை அளிக்கும். இருப்பினும் மனம் அமைதியற்றதாக இருக்கலாம். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
மகரம் : (MAGARAM) மகர ராசி அன்பர்களே ஜோதிட சாஸ்திரப்படி இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறது. உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வியில் ஏற்றம் காண்பார்கள். வீடு வாகனம் போன்றவற்றை மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள். அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். சூரிய கிரகண பலன்கள்