சூரிய கிரகணம் (SOLAR ECLIPSE)
சந்திரன் பூமியையும், பூமி சூரியனை சுற்றி வரும் நிலையில், சூரியன் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும் நிகழ்விற்கு சூரிய கிரகணம் என்று பெயர்.
கிரகணம் நிகழும் நேரம்
இந்த சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 14ம் தேதி இரவு 8.33 மணிக்கு தொடங்கி 2.25 மணிக்கு முடிகிறது.
எங்கெல்லாம் தெரியும்
இந்த சூரிய கிரகணம் அமெரிக்கா, வட அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, கொலம்பியா, கியூபா, பெரு, உருகுவே, வெனிசுலா, ஜமைக்கா, பிரேசில், பராகுவே, டோமினிகா உள்ளிட்ட நாடுகளில் தெரியும்.
கிரகணத்தின் போது நாம் செய்ய கூடாதவை
* கிரகணத்தின் போது நாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
* கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் உடலில் அரிப்பு ஏற்படும் இடத்தில் சொரிந்து கொண்டால், குழந்தைக்கு அந்த இடத்தில மச்சம் போன்று கருமை நிறத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.
* பாலூட்டும் தாய்மார்கள் கிரகண நேரத்தில் குழந்தைக்கு பாலூட்ட நேரிட்டால், அந்த நேரத்தில் குழந்தையின் மேல் கருப்பு துணி போர்த்தி பாலூட்ட வேண்டும்.
* கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போதான் உணவு அருந்த வேண்டும்.
* தீய கதிர்களால் கண்ணுக்கு தெரியாத பல உயிரினங்கள் கொல்லப்படுவதால், கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது, சமைத்த உணவுகளை மூடி வைக்க வேண்டும்.
* கிரகணத்தை வெறும் கண்ணில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
* தர்ப்பை புல் கதிர்வீச்சுகளை தடுக்க கூடிய வல்லமை வாய்த்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும்.
* சாஸ்திர முறைப்படி கிரகண நேரத்தில் தெய்வ சிலைகளை தொடுவதையோ, வழிபடுவதையோ தவிர்க்க வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு அனைத்தையும் சுத்தம் செய்த பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
* கிரகண நேரத்தில் சூரியனுடைய மந்திரமான ஆதித்யஹ்ரூதயம் மற்றும் சிவனுடைய கோத்திரங்கள், சிவபுராணம் ருத்ரம் ஆகியவை சொல்லலாம். முடியாதவர்கள் ஓம் நமசிவாய மற்றும் காயத்ரி மந்திரம் சொல்லலாம். மேலும் அபிராமி அந்தாதியும் சொல்லலாம்.
* கிரகணம் முடிந்த பின்னர் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். சுவாமி படங்களை சுத்தம் செய்யவும். பிறகு கல் உப்பு போட்ட தண்ணீரில் குளித்து, சுவாமிகளுக்கு தீபம் ஏற்றி இறைவனை வழிபட நன்மை உண்டாகும்.