Header Ads Widget

<

எந்த திசையில் பீரோ வைத்தால் கோடீஸ்வரர் ஆகலாம் | NOVEMBER MONTH RASI PALAN 2023 IN TAMIL

நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருள்களுக்கும் வாஸ்து சாஸ்திரம் உள்ளது. எப்படி ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ நாம் வாங்கும் போது எப்படி வீட்டு மனையடி சாஸ்திரம் பார்க்கிறோமோ அதே போல தான் வீட்டில் உள்ள வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருள்களுக்கும் வாஸ்து சாஸ்திர விதிகள் உண்டு. தவறான இடத்தில் பொருள்களை வைத்தால் அது நேர்மறை ஆற்றல் சீராக இல்லாமல், ஓட்டம் அதிகரித்து நமக்கு தீங்கு விளைவிக்கும். நம்முடைய ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் பீரோ இருக்கும். அந்த பீரோவில் துணிகள், பணம் மற்றும் நகைகளை வைத்திருப்போம். அப்படிப்பட்ட பீரோவை வாஸ்துப்படி வைக்காவிட்டால் வீட்டில் பணம் சேராமல் செலவாகி கொண்டே இருக்கும். இதனால் வீட்டில் செல்வம் சேராமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சரி வாஸ்துப்படி  பீரோவை எங்கே வைத்தால் செல்வம் பெருகும் என்று இந்த பதிவில் காண்போம்.


1. வாஸ்துப்படி முதலில் பீரோவை சுவற்றை ஒட்டி மிகவும் நெருக்கமாக வைக்க கூடாது, சிறிது இடைவெளி இருக்க வேண்டும். இதனால் வெளியே இருந்து வரும் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும். இதனால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.

2. வாஸ்துப்படி பீரோவில் பணம், மற்றும் நகைகளை வைத்தால் அந்த பீரோவை அறையில் வடக்கு பகுதியில் வைக்க வேண்டும். ஏனென்றால் வடக்கு திசை குபேர திசையாகும். இந்த திசையில் பீரோவை வைக்கும் போது நகையும், பணமும் அதிகமாக வந்து சேரும்.

3. வாஸ்துப்படி பீரோவானது எப்போதும் மரத்தால் மற்றும் இரும்பால் ஆனதாக இருக்க வேண்டும் அப்போதான் பண வரவு அதிகரிக்கும், செல்வமும் பெருகும்.

4. வாஸ்துப்படி பீரோவை தென்மேற்கு திசையில் அதாவது கன்னி மூலையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், பீரோவை திறக்கும் போது, அது வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு இருக்கும். இதனால் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

5. வாஸ்துப்படி வீட்டில் ஈசானி பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோவை வைக்க கூடாது அப்படி வைத்தால் பணம் அதிகமாக செலவாகும்.

6. வாஸ்துப்படி தென்கிழக்கு பகுதியான அக்னி மூலையில் பீரோவை வைக்கக்கூடாது. இந்த திசையில் வைத்தால் பணம் சேராமல் விரயம் ஆகும்.

7. வாஸ்துப்படி பீரோவின் நிறம் அடர் நிறத்தில் இருக்க கூடாது. பணம், நகை, செல்வம் சேர வேண்டும் என்றால் பீரோவின் நிறம் க்ரீம் அல்லது வெளிறிய நிறத்தில் இருக்க வேண்டும்.

8. வாஸ்துப்படி படுக்கையறையில் பீரோவை வைப்பதாக இருந்தால், கண்ணாடி இல்லாத பீரோவை வைக்க வேண்டும். ஏனென்றால் பெட்ரூமில் கண்ணாடியுடன் கூடிய பீரோவை வைத்தால் அந்த கண்ணாடியில் படுக்கை பிரதிபலிக்கும். இதனால் படுக்கைக்கு எதிராக கண்ணாடி பீரோவை வைக்க வேண்டாம்.

9. வாஸ்துப்படி கிழக்கு திசை மற்றும் வடக்கு திசையில் பீரோவை வைத்தால் செல்வம் பெருகும். மேலும் பணத்தை அப்படியே வைக்காமல் மஞ்சள் நிற பையுடன் சேர்த்து வைப்பது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.