Header Ads Widget

<

மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெண்களுக்கு வரும் எஸ்எம்எஸ் ரூ.1 | KUDUMBA THALAIVIKU RS.1000 SMS LATEST NEWS


தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர்க்கு மாதம் தோறும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் தேர்வாகாத மகளிருக்கு குறுந்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும், விண்ணப்பம் நிராகரிக்கபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கோரினால் அதற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மகளிருக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஏடிஎம் கார்டுகள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்காக கார்டுகளை தயாரிக்கும் பணிகள்  முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1, 10 பைசா, 25 பைசா, 40 பைசா என்று வரவு வைக்கப்பட்டு அதற்கான SMS-ம் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் விண்ணப்பித்து இதுவரை SMS வராதவர்களுக்கும் அவர்களது வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்; வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி ஒரு கோடிக்கும் மேலானவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படவுள்ளது.  இதில் தவறுகள் ஏதும் நடக்காமல் இருப்பதற்காகவும், பயனாளிகளின் வங்கி கணக்கில் சரியான முறையில் பணம் செல்கிறதா என்று சோதனை முயற்சியாக இவ்வாறு ரூ.1, 10 பைசா, 25 பைசா, 40 பைசா என்று வரவு வைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த SMS மூலம் பயனாளிகள் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைப்பது உறுதி மகிழ்ச்சியில் உள்ளனர்.