தமிழ்நாட்டில் ரூ.1000 க்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய மாற்றங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 1 கோடியே 54 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. டோக்கனில் கொடுத்த நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்கு சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் குறித்த அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இதில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியதால் அந்த குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பலன் பெறுவது தடை படக்கூடாது. எனவே இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள், முதியோர் ஓய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்ப தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேலும் இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பயனாளர்களுக்கு குறுஞ்செய்தி
இந்த திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், இதற்கென உருவாக்கப்பட்ட செயலியில் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு தகுதி அடிப்படையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுத்திறது. தமிழக அரசிடம் உள்ள ஆதார் விபரம், ரேஷன் கார்டு, வருமான வரித்துறை, மின் கட்டண தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ அது குறித்த தகவல் பயனாளியின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அது தொடர்பாக பயனாளிகள் மேல் முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.