தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் முடிவடைந்த நிலையில், இந்த திட்டத்தில் இதுவரை 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலினை செய்ய அரசு திட்டமித்துள்ளது. இந்த நிலையில் இந்த உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் யாருக்குகெல்லாம் கிடைக்காது என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது
1. ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
2. குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி, வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
3. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்
4. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியர்கள்.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகள்
6. சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்
7. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
8. 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் ஆகும்.
யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்
1.ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
2. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்
3. ஆண்டிற்கு வீடு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் ஆகும்.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்; பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் உதவி தொகை ரூ.1000 வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்யும் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவடையும். பரிசீலனைக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்த தகவல் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.