தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கனமழையின் காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை முதல் வருகிற 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்பத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும். இந்த நிலையில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில், இன்று தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லுர், கடையம், மற்றும் கீழப்பாவூர் வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பட்டுள்ளது. இது தவிர மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.